அஸ்வெசும உதவித்தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பு

அஸ்வெசும உதவித்தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பு

2024 டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித்தொகை இன்று (12.12) பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படவுள்ளது.

அத்துடன், பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த 4 இலட்சம் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த மேலும் 4 இலட்சம் பயனாளர்களுக்கான நலன்புரி நன்மைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

Social Share

Leave a Reply