இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி இம்மாதம் 4 ஆம் திகதியிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தனியார் துறைக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் வரை தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் 9,500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
9,500 மெற்றிக் தொன் அரிசியில் 3,300 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 6,200 மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாக அருக்கொட தெரிவித்துள்ளார்.
இறக்குமதி உரிமம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.