குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிப்பு

குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிப்பு

முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (20.12) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குலசிங்கம் திலீபனின் பிரத்தியேக செயலாளரும், நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கிறிஸ்டோபர் டினேஸ் என்பவர் நேற்றிரவு வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply