ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான வேன் – இருவர் பலி

ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான வேன் - இருவர் பலி

ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று (31.12) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் மற்றும் 65 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளனர்.

இயந்திரக் கோளாறினால் வாகனத்தை நிறுத்த சாரதி முற்பட்ட நிலையில் கல்லொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply