சைக்கிள் ஓட்ட சம்மேளன சிக்கல் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடல்

சைக்கிள் ஓட்ட சம்மேளன சிக்கல் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடல்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்ட சம்மேளனத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03.01) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் டங்கன் வயிட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அருண பண்டார உட்பட விளையாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டதுடன், சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்துகுட்பட்ட 66 சங்கங்களும் அவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் விளையாட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர், குறித்த பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுப்பாதக தெரிவித்துள்ளார். சைக்கிள் ஓட்ட சம்மேளன உறுப்பினர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமெனவும், அதன் பின்னர் சைக்கிள் ஓட்ட குழுவை நியமித்து, நிர்வாகத்துக்கான தேர்தலை நடத்த முடியும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய நெருக்கடிகளால் விளையாட்டை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது, கடந்த காலத்தை சம்மேளனம் மற்றும் சங்கங்களில் உள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதில் செலவிடப்பட்டது. மேலும் சங்கங்களுக்குள் உள்ள உள் அதிகார மோதல்கள் விளையாட்டிற்கு தீங்கு விளைவிக்கும், எனவே விளையாட்டுக்கு தீங்கு விளைவிக்கும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வைப் பெற்றுக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

Social Share

Leave a Reply