பாகிஸ்தான் – சைலமாபாத்தில் நான்கு பெண்கள் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை அடித்து சித்திரவதை செய்து நிர்வாணமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சைலமாபாத்திலுள்ள கடையொன்றில் குறித்த பெண்கள் திருட முற்பட்டதாக கூறி, அக்கடையில் இருந்தவர்கள் அவர்களின் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக்கி நடுவீதியில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண்கள், தாம் கழிவு பொருட்களை சேகரிக்கவே அங்கு வந்ததாகவும் பொய் குற்றச்சாட்டு சுமத்தி தம்மை நிர்வாணமாக்கி ஆடைகளை தராமல் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் 5 சந்தேகநபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் இதுபோலவே இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவும் சித்திரவதை செய்யப்பட்டு தீயிட்டு எரித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் முன்னரே பாகிஸ்தானில் மற்றுமொரு கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனையும் பாகிஸ்தான் ஆளும் தரப்பு எவ்வாறு கையாளும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அதிகரித்து செல்லும் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்களும் அங்கு மக்கள் அச்சமின்றி உயிர் வாழ்வது குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.