எச்சில் உமிழ்ந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்

நாட்டில் பெருந்தெருக்கள் மற்றும் வீதிகளில் எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் எச்சில் உமிழ்வதால் சூழல் மாசுபடுவதுடன், கொவிட் அச்சுறுத்தலும் அதிகரிப்பதனை கருத்தில் கொண்டே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தண்டனை சட்டக்கோவையின் படி, இதுபோன்றகுற்றங்களைச் புரிபவர்களை கைதுசெய்து நீதிமன்றில் வழக்கு தொடரமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எச்சில் உமிழ்ந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்

Social Share

Leave a Reply