பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக பிரபலப்படுத்த நடவடிக்கை

பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக பிரபலப்படுத்த நடவடிக்கை

பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவையில் தங்காமல் இருப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சுற்றுலாத்துறையின் நன்மைகள் மக்களை சென்றடையவில்லை என்பதுடன் அந்த நன்மைகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிப்பது மற்றும் பொலன்னறுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சியை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி. பி. சரத் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான மெய்தான்ஸ் மேஸின் நிர்வாக அதிகாரியும் இணைந்துகொண்டார்.

Social Share

Leave a Reply