பஸ் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வாரம் பதில் பொலிஸ் மா அதிபரை சந்திக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதுவரை தனியார் பஸ் உரிமையாளர்கள் அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட வாகனச் சோதனையும் நேற்று பல நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் பயணியர் பஸ்களை சோதனையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
இதேவேளை, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் வாகனங்களின் உதிரி பாகங்களை அகற்றக் கூடாது என முச்சக்கர வண்டி சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.