துமிந்த சில்வாவுக்கு சிறப்புக்கு சலுகைகளை வழங்கப்படவில்லை

மரணதண்டை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு, சிறைச்சாலை வைத்தியசாலையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக வெளியாகிய தகவல்களில் உண்மையில்லை என சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அத்தோடு சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் வைத்திய விடுதியின் புகைப்படங்களையும் சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் அவரது நோய்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாவும், அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற வேண்டுமா என்பது தொடர்பில், சுகாதர சேவைகள் பணிப்பாளரிடம் விசாரித்துளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போது, வைத்திய நிபுணர்களினால் வழங்கப்பட்ட அறிவுறைக்கமைய அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்திய குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர குழுவினருக்கும், துமிந்த சில்வா குழுவின்ருக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற மோதலில் துப்பாக்கி பிரயோகத்தில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்ட அதேவேளை, துமிந்த சில்வா காயமடைந்து, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற நிலையில், குணமைடந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

துமிந்த சில்வாவுக்கு சிறப்புக்கு சலுகைகளை வழங்கப்படவில்லை

Social Share

Leave a Reply