கனடா பிரதமர் பதவி விலகும் வாய்ப்பு?

கனடா பிரதமர் பதவி விலகும் வாய்ப்பு?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடே பதவி விலகும் வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனேடிய லிபரல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து இன்று திங்கட்கிழமை பதவி விலகும் வாய்ப்புள்ளதாகவும், புதன் கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது எதிர்வரும் ஒக்டபேர் மாதத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கனடாவில் இந்த சூழ் நிலை அரசியில் சிக்கல் நிலை தோற்றுவிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

புதன் கிழமை கட்சி உயர்மட்டத்தவர்களுடன் அவசர கூட்டத்துக்கு ஜஸ்டின் ரூடே அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து ரூடேயின் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஜஸ்டின் ரூடே 9 வருட காலமாக பதவி வகித்த நிலையில், எதிர்க்கட்சி பலமான நிலையில் காணப்படுவதாகவும், ஜஸ்டின் ரூடே பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை அவரது கட்சிக்குள்ளேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply