சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன
இப்போதாவது நீதியை நிலைநாட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08.01) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,
இந்த கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்விவகாரத்தை அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துச் சென்றுள்ளார்
சிரச ஊடக வலையமைப்பின் மீதான கொடூரத் தாக்குதல் இடம்பெற்று 16 வருடங்கள் கடந்துள்ளன.
லசந்த விக்கிரமதுங்க மற்றும் ராஜமகேந்திரன் ஆகியோர் நீதி மற்றும் நியாயத்திற்காக முன்நின்றார்கள்
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்றார்.