இணையத்தளத்தின் ஊட இலங்கை விளையாட்டுக்களை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது விளையாட்டு இணையத்தளமான Sri Lanka Sports.com மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான உள்ளூர் மன்றம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரையரைக்கொண்ட Bocce போட்டியை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி பண்டாரவளையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணரவும், சமூக மனப்பான்மையை மாற்றி, பொழுதுபோக்கு மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதன் மூலம் அவர்களை சாதாரண குழந்தைகளுடன் சமமாக நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் இந்த போட்டியின் மூலம் இந்த போட்டி ஒரு முக்கியமான சமூக செய்தியை அனுப்புவதே இதன் நோக்கமாக அமைகிறது.
இலங்கையின் முதல் விளையாட்டு இணையத்தளமாக, Sri Lanka Sports.com நாட்டில் விளையாட்டு முறைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறானா போட்டிகளை அறிமுகப்படுத்தி, தொடர்ந்தும் அதனை முன்னெடுத்து வருகின்றமை இதன் சிறப்பம்சமாக அமைகிறது.