இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களினால் சிறப்பான வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. தொடரில் 1-2 என தோல்வியடைந்திருந்தாலும் இந்த வெற்றி இலங்கை அணிக்கு சிறப்பானதே.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் பத்தும் நிஸ்ஸங்க 66(42) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். குஷல் மென்டிஸ் 54(48) ஓட்டங்கள், ஜனித் லியனகே 53(52) ஓட்டங்கள். கமிந்து மென்டிஸ் 46 (71) ஓட்டங்கள். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மட் ஹென்றி 4 விக்கெட்களையும், மிச்செல் சென்டனர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 29.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. மார்க் சப்மன் தனித்து நின்று போராடி 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், மஹீஸ் தீக்ஷண, எஷான் மாலிங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள். அசித்த பெர்னாண்டோ போட்டியின் நாயகனாக தெரிவானார்.