கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு?

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு?

இலங்கையில் நிலவும் கடவுச்சீட்டு சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. e கடவுச்சீட்டு கொள்வனவு விலை மனுகோரலுக்கு சட்டமா அதிபர் பச்சை சமிக்ஞை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இருப்பினும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலத்தில் 50 இலட்சம் e கடவுச்சீட்டு கொள்வனவுக்காக ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தை பெறாத பிறிதொரு நிறுவனம் விலை மனு கோரல் தவறானது என வழக்கு தாக்கல் செய்தது. இதன் காரணமாக கடவுச்சீட்டு வழங்களில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது கைவசமிருக்கும் கடவுச்சீட்டுக்கள் வருடத்தின் முதல் அரை ஆண்டுகளுக்கே போதுமானது என தெரிவிக்கப்படுகிறது. மக்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதோடு அவசர தேவைகளுக்கு கடவுச்சீட்டு பெறுபவர்கள் அதிகாலையில் வரிசையில் நிற்கவேண்டிய சூழ்நிலை காணப்படும் அதேவேளை, அவசர தேவைக்கான உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

e கடவுச்சீட்டு விலை மனுக்கோரல் நடைபெற்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, இந்த முறை நடைமுறைக்கு வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென்பது தொடர்பில் எந்தவித தகவலும் இல்லை.

இந்த கடவுசிசீட்டு சிக்கல் நிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு அதன் அறிக்கையின் அடைத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply