தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் வடக்கு மீனவர்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் தமிழகத்துக்கு நிகழ்வு ஒன்றுக்காக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கும், ஸ்டாலினுக்குமிடையிலான சந்திப்பில் வடக்கு மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினை பேசப்பட்டதாகவும், இந்த விடயம் தொடர்பில் தனியான கருந்துரையாடல் ஒன்றை தமிழக முதல்வர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் மேலும் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் வடக்க மீனவர்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திக்கவுள்ளார்கள். எப்போது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.