
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்னாள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் இறந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆண்கள் இருவரும் இறந்துள்ளதாகவும், ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் வைத்தியசாலை தகல்வல்கள் மூலம் உறுதி செய்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்றதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக்க மானதுங்க உறுதி செய்துள்ளார். நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்காக இன்று(16.11) பேரூந்தில் வந்து இறங்கி நீதிமன்றம் நோக்கி நடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கி சூடு நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
நடைபெறுக்கொண்டிருக்கும் வழக்கு தொடர்பிலான முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் நிலவுகின்றது.