ஹிந்தி நடிகர் ஷாய்ப் அலிப் கான் மீது தாக்குதல்

ஹிந்தி நடிகர் ஷாய்ப் அலிப் கான் மீது தாக்குதல்

ஹிந்தி பிரபல நடிகர் ஷாய்ப் அலிப் கான் மீது இன்று(16.01) அதிகாலை 2.30 இற்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரப்பகுதியில் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை, பண்றா பகுதியில் உள்ள அடுக்கு மாடி வீட்டு கட்டிட தொகுதியின் பதினோராவது மாடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வீட்டை உடைத்து உள்ளே சென்ற நபர், நித்திரையிலிருந்து எழுந்த ஷாய்ப் அலிப் கான் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலை நடாத்தியவர் யார் என இனம் கானப்படவில்லை என பண்றா பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். இது ஒரு திருட்டு முயற்சியென பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . கூரிய ஆயுதத்திதனால் தாக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு இடங்களில் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளாதாகவும், அவற்றில் இரண்டு முதுகெலும்புக்கு மிக அருகாமையில் ஆழமாக காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பு செய்திகள் கூறுகின்றன. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், இன்று காலை 9 மணிவரையும் சத்திரசிகிச்சை நடைபெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply