
மன்னார், விடத்தல்தீவில் காற்றாலை மின் திட்டத்திற்காக இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் இலங்கை அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2025 மே 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இலங்கையின் பச்சை நடவடிக்கை அமைப்பு (Green Movement of Sri Lanka (GMSL)) தலைவர் சந்திம அபயவர்தன தாக்கல் செய்த மனுவை இன்று(16.01) விசாரணைக்காக எடுத்துக்கொண்ட வேளையில், மேன் முறையீட்டு நீதிபதி U.M.B.கரலியகொட வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த விடயம் தொடர்பில் பல முக்கிய வழக்குகள் மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் எந்தவித இறுதிக்கட்ட முடிவுகளும் எட்டப்படவில்லை என அரச சட்டத்தரணிகள் தெரிவித்த நிலையில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.