லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், த்ரிஷா உட்பட பலர் நடிக்கும் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று(17.01) இரவு 8 மணிக்கு வெளியாகியது. ட்ரைலரை லட்சக்கணக்கிலானவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாள் முடிவதற்குள் 1 கோடி பார்வையாளர்களை ட்ரைலர் அண்மித்து வருகிறது. திரைப்பட உரிமையை பெற்றுள்ள சன் பிக்சர்ஸ் ட்ரைலரை வெளியிட்டுள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் 82 இலட்சம் பார்வையாளர்களை ட்ரைலர் கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் 1 கோடியை தொடும் என எதிபார்க்கபப்டுகிறது. அதேவேளை திரைப்படம் பெப்ரவரி 6 ஆம் திகதி வெளியாகும் என்ற தகவலும் ட்ரைலர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.