
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு இன்று நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. காணி மோசடி வழக்கு ஒன்றில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் எதிர்கொண்ட நிதி முறைகேடுகளின் அடிப்படையில் மிகப்பெரிய வழக்கான இந்த வழக்கின் தீர்ப்பு, ராவல்பிண்டியின் காரிஸன் நகர சிறையில் உள்ள ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. அங்கு இம்ரான் கான் ஓகஸ்ட் 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.