வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஓய்வு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஓய்வு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிபதவியிலிருந்து இன்றுடான் (19.01) ஓய்வு பெறுகிறார். நீதிபதியாக வவுனியாவில் நீண்ட காலமாக பதவியாற்றிய இவர் வவுனியா உட்பட பல இடங்களில் நெருக்கடியான காலங்களிலும், போர்க்காலங்களில் பல அச்துறுத்தல்களுக்கு மத்தியில் பயமின்றி நேர்மையாக நீதிபதியாக கடமையாற்றியவர். இதன் காரணமாக மக்கள் இவர் மீது நம்பிக்கையும், மதிப்பும் கொண்டுள்ளனர்.

பிழை விடுபவர்களை கண்டிக்கவும், தேவையான இடங்களில் அறிவுரைகள் வழங்கியும் சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல செயற்பட ஒரு நல்ல நீதிபதி என பெயர் பெற்றவர் இவர். தமிழ் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்ட வேளையில், அதிகாரத்தின் மூலம் மக்கள் ஒடுக்கப்பட்ட வேளைகளில் அதற்கு இடம் வழங்காது மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர் இளஞ்செழியன்.

2017 ஆம் ஆண்டு இவர் யாழ்ப்பாணத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய வேளையில் இனம் தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மயிரிழையில் தப்பினார். குறித்த சம்பவத்தில் இவரது பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் கொல்லப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாக கொண்டவர் இவர், யாழ் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவராவார்.

நாளை(20.01) அவரின் 61 ஆவது பிறந்த தினம். அதனடிப்படையில் இன்றுடன் அவரின் பதவிக்காலம் நிறைவுக்கு வருகிறது.

Social Share

Leave a Reply