அண்மையில் புகையிரதம் ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளது உடற்பகுதிகள் மாசாஜ் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளிவந்திருந்தன. புகையிரத சேவையில் மாஸாஜ் ஆர்மபிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையராகவும், புகையிரத நிலைய ஊழியராகவும் தான் வெட்கப்படுவதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை நிறுவனம் ஒன்று வாடகைக்கு புகையிரதத்தை பெற்றுக்கொண்டதாகவும், அவர்களே இந்த செயற்ப்பாட்டை செய்துளளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் புகையிரத்துக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பின், அவை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடப்படுமென மேலும் அவர் கூறியுள்ளார்.
புகையிரத திணைக்களத்தினால், சுற்றுலாத்துறைக்கென பிரத்தியோக புகையிரதங்கள் வாடகை முறையில் வழங்கப்படுவதாக தம்மிக்க ஜயசுந்தர மேலும் உறுதிப்படுத்தினார்.