சீன, இந்திய நிறுவன முதலீடுகளை முதலில் ஏன் எதிர்தீர்கள்-நாமல் கேள்வி

சீன, இந்திய நிறுவன முதலீடுகளை முதலில் ஏன் எதிர்தீர்கள்-நாமல் கேள்வி

முந்தைய அரசாங்கம் இந்தியா மற்றும் சீனா நாடுகளின் நிருவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்த வேளையில் எதிர்த்த தேசிய மக்கள் சக்தி, தற்போது அதே நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது ஏன் என விளக்கமளிக்க வேண்டுமெனவும், மக்களுக்கு அது தொடர்பில் தெளிவூட்ட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

சீனாவுக்கான வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க நாடு திரும்பிய வேளையில் இந்த கருத்தை நாமல் ராஜபக்ஷ எழுப்பியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்த வேளையில் இதே நிறுவனங்களுடனான நடவடிக்கைளை ஊழல் என கூறியவர்கள் தற்போது அதே வேலையையே தொடர்கிறார்கள். இந்த நிறுவனங்களை சர்ச்சைக்குரிய ஊழல் நிறுவனங்களாக விமர்சித்தார்கள், அதை மென்று விழுங்கிவிட்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னதாக எதிர்த்துவிட்டு தற்போது ஏன் அதே நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளார் என கூறவேண்டுமென நாமல் கோரிக்கை முன்வைத்துள்ளார். அதேவேளை தேசிய மக்கள்’சக்தி அவர்களின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டுமெனவும், அவர்களது வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply