தனக்கெதிரான வழக்கில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவிப்பு

தனக்கெதிரான வழக்கில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவிப்பு

தனக்கெதிரான வழக்கில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவிப்பு

பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுர நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கமைய நீதிமன்றத்தில் நேற்று(22.01) அர்ச்சுனா முன்னிலையாகியிருந்தார். அதன் போது வழக்கிற்காக தான் அழைக்கப்படவில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“இராமன்தான் லோச்சனா” என்ற பெயரில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் இராமநாதன் “அவர்கள் இராமநாதன் லோச்சனா” எனும் நபரை தேடுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார். உரிய சந்தேக நபரை தேடி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டதாக அர்ச்சுனா மேலும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பெப்ரவரி 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“பெயர் பிழையாக வழங்கியிருந்தால் அவருக்கெதிராக வழக்கு இல்லை என்ற நிலை ஏற்படாது. பொலிசார் பெயரை திருத்தி மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னர் வழக்கு நடைபெறும்” என்பதனை வழக்கறிஞர்களிடம் வி மீடியா உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி

Social Share

Leave a Reply