ICC டெஸ்ட், ஒரு நாள், அறிமுக விருதுகள்

ICC டெஸ்ட், ஒரு நாள், அறிமுக விருதுகள்

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விருதுகள் அறிவிக்கப்பபட்டு வருகின்றன. அதன்படி சிறந்த அறிமுக வீரர் விருதை இலங்கை அணியின் வீரர் கமிந்து மென்டிஸ் வெற்றி பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டில் சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய நிலையில் சிறந்த அறிமுக வீரர் விருதை வென்றார்.

71 டெஸ்ட் விக்கெட்களை 14.92 என்ற சராசரியில் கைப்பற்றிய இந்தியா அணியின் ஜஸ்பிரிட் பும்ரா சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 52.12 என்ற சராசரியில் 417 ஓட்டங்களையும், 20.47 என்ற சராசரியில் 17 விக்கெட்களை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் வீரர் அஹமதுல்லா ஓமர்ஷாய் சிறந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டி வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 747 ஓட்டங்களை பெற்றுகொண்ட இந்திய அணியின் வீராங்கனை ஸ்மிர்தி மந்தானா சிறந்த மகளிர் வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

Social Share

Leave a Reply