இலங்கையின் அந்நிய செலாவணி சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (09/12) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்துரைக்கையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டுள்ள சில குழுக்கள் நாட்டை அரசியல் ரீதியாகவும் ஸ்திரமற்ற நிலைப்பாட்டிற்கும் உள்ளாக்குவதாக சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த 2014ஆம் ஆண்டின் இறுதியில் 8.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அதேவேளை, 2019ஆம் ஆண்டின் இறுதியில் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக வெளிநாட்டுக் கடன் சேவைகள் அதிகரித்துள்ளன.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் 2014இல் மொத்தக் கடன் சேவைகளில் 42.4 சதவீதமாக இருந்தது. அது 2019 இறுதிக்குள் 46.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆகையால் மொத்த வெளிநாட்டுக் கடன் சேவையை 40 சதவீதமாக மட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.