வடமேல் ஆளுநராக வசந்த கரன்னகொட நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட இன்று (09/12) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே அண்மையில் காலமானதை தொடர்ந்து அப்பதவிக்கு முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தொடர் விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

அண்மையில் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய முடியாதென சட்டமா அதிபரின் தீர்மானம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கெதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

வடமேல் ஆளுநராக வசந்த கரன்னகொட நியமனம்

Social Share

Leave a Reply