சஞ்சீவ கொலைச் சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது

சஞ்சீவ கொலைச் சம்பவம் -    பிரதான சந்தேகநபர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவ, விசாரணைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் இன்று காலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply