
தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும்.
இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சுமார் 03 மாதங்களுக்குப் பின்னர் இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.