ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22.02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க பல வெற்றிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய ரயில்வே கூட வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து ‘கவக்’ என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

வெப்பநிலையை கண்கானிக்கும் கேமராக்கள் போன்றவைகளும் இங்கு பயன்படுத்தப்படுவதால் இதில் கவனம் செலுத்துங்கள்

மேலும் கென்யா போன்ற நாடுகளில் தூண்களுக்கு மேலால் செல்லும் ரயில் வழித்தடங்களும், சுரங்க ரயில் பாதைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக தேனீக்கூடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் இந்த ஆபத்துக்களை குறைக்க முடியும்” என்றார்.

எனவே, வனஜீவராசிகள் அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் வேலைத்திட்டமொன்றை நோக்கி செல்லுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply