மின் வெட்டு விநியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஒரு மணித்தியால மின்வெட்டு இனி தொடராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் மின் பிறப்பாக்கிகளில் ஏற்பட்டிருந்த கோளாறின் காரணமாக நாட்டின் பல பாகங்களுக்கும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மின் பிறப்பாக்கிகளில் ஏற்பட்டிருந்த கோளாறு தற்சமயம் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
