ஊடக நிறுவனங்களின் விளையாட்டுத் துறைத் தலைவர்கள் ,விளையாட்டு அமைச்சர் இடையே சந்திப்பு!

மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களின் விளையாட்டுத் தலைவர்களுக்கும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் இன்று (24.02) இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்னவும் கலந்து கொண்டார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விளையாட்டு அமைச்சினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் எதிர்காலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

பத்திரிகையாளர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதுடன், மேலும் விளையாட்டு அமைச்சு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விபரிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply