வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின்னரான முதற்தொகுதி பாவித்த வாகனங்கள் தாய்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்தன.
தனிநபர் பாவனைக்காக விற்பனை செய்யப்படவுள்ள குறித்த வாகனங்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள “டபள்கெப்” ரக வாகனங்கள் உள்நாட்டுச் சந்தையில் 24.5 மில்லியன் ரூபாய் முதல் 25.5 மில்லியன் ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஜப்பானிலிருந்து பிரிதொரு வாகனத் தொகுதி இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.