பிரதான சந்தேகநபர்கள் கைது

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தின் போது வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (10/12) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், அங்குள்ள இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊடகவியலாளர்களை தாக்கி, அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளையும் திருடிச் சென்ற நபர்களில் பிரதான சந்தேக நபர்கள் இருவரை கைது செய்து, கிண்ணியா பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(திருகோணமலை நிருபர்)

பிரதான சந்தேகநபர்கள் கைது

Social Share

Leave a Reply