எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி, தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (10/12) பணிப்புரை விடுத்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நோக்கத்தின் கீழ் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை பொது இடங்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொள்ளதவர்கள் செல்வதை தடுக்கும் விதமாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
அதற்கமைய பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.