எதிர்வரும் திங்கட்கிழமை (13/12) அன்று புகையிர நிலைய பொறுப்பதிகாரிகள் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
புகையிரத பொறுப்பதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
புகையிரத சேவைகளில் காணப்படும் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை அநுராதபுரம் மற்றும் காங்கேசன்துறை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஒன்றிணைந்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும், உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் சகல புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளையும் ஒன்றிணைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோமென அச்சங்கம் தெரிவித்துள்ளது.