ரணில் விக்ரமசிங்க டில்லியில் விசேட உரை

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28.02) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர்.

தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளமை விசேட அம்சமாகும்.

மேற்படி, இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அவர் மார்ச் மாதம் 02 ஆம் திகதி நாட்டுக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply