நாடளாவிய ரீதியில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள்
விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
எமக்கு இடம்பெற்ற நியாயமற்ற நடவடிக்கையால் இன்று (1) முதல் எரிபொருள் முன்பதிவுகளை நிறுத்த சங்கம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே நாம் கொள்வனவு செய்த எரிபொருளை முழுவதுமாக விற்பனை செய்வோம் எனவே இன்றும் நாளையும் எரிபொருள் கிடைக்கும்.
புதிய முன்பதிவுகளை மேற்கொள்ளாததால், திங்கட்கிழமை முதல் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும்.
கடந்த காலங்களில் சங்கம் ஒருபோதும் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றாலும், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 03
வீத சலுகையை இரத்து செய்ததால் எமக்கு வேறு வழியில்லை.
தன்னிச்சையான முடிவுகளை எடுத்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாம் வலியுறுத்துகிறோம்.” என்றார்.