படலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்

‘படலந்த ஆணைக்குழு அறிக்கையை’ இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல் ஜெசிராவிற்கு அளித்த பேட்டியின் பின்னர் படலந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply