அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமைக்கு
எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட வேண்டும் எனவும்
அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மருத்துவர் விடுதியில் இருந்த போது நேற்று திங்கட்கிழமை இரவு அடையாளந்தெரியாத நபரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.