பிரதமர் மோடி அடுத்த மாதம் நாட்டிற்கு வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (15.03) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Social Share

Leave a Reply