கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் இன்று (15.03) அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட நிலையில் நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் காலை 10 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.