‘உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுங்கள்’ – ஹர்ஷ

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது குறித்து விவாதம் செய்ய தன்னை வரவேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று (11/12) இவ்வாறு தெரிவித்துள்ளார்

எனினும் விவாதம் செய்வதற்கு இப்போது நேரமில்லை என்றும், உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று குறுகிய காலத்தில் இந்த பெரிய நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்றே தான் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் அதுபற்றி தொடர்ந்து கூறுகையில், ‘சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிவாரண தொகை மூலம் நாட்டின் தற்போதைய இந்த நெருக்கடி பிரச்சினைக்கு நீண்ட காலத்திற்கு தீர்வு காணலாம்.

எனினும் அங்கு செல்வதற்கான இந்த விவாதம் இப்போது ஒரு நகைச்சுவையாக மாறிவிட்டது. அமைச்சர் பந்துல குணவர்தன என் எண்ணங்களை அறிய விரும்பினால் , சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நான் 2020 முதல் வலியுறுத்தியிருந்தமையை காணலாம்.

நாம் நமது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளோம். நாடுகளின் சமநிலை நெருக்கடியை தீர்க்க நிதி உதவுகிறது. ஆனால், அந்த பணத்தை எடுத்து விளையாட முடியாது. அதனால்தான் இனியாவது முட்டாள்தனத்தை நிறுத்திவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுங்கள். நாட்டை கேலி செய்யும் அந்த விவாதங்கள் இந்த நேரத்தில் பயனற்றவை’ என ஷர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

'உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுங்கள்' - ஹர்ஷ

Social Share

Leave a Reply