உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆளும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் அண்மையில் நிறைவுபெற்றத்தை அடுத்து நேற்று முன்தினம் (16/03) வேட்புமனுவில் கையொப்பமிடும் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றதாக
கொழும்பு கொட்டாஞ்சேனை வேட்பாளர் மேற்கு தொகுதி எஸ். ஆனந்தகுமார் தெரிவித்தார்.
வட கொழும்பு அமைப்பாளர் நாராயண பிள்ளை சிவானந்தராஜா தலைமையில் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
தங்கள் கட்சியின் ஏனைய வேட்பாளர்கள் கையொப்பம் இடும் நிகழ்வும் இனிதே நிறைவுற்றதாக கூறிய அவர் “ஒரு வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் மீண்டும் தேசிய மக்கள் சக்தியின் கரங்களை பலப்படுத்தி, ஊழலற்ற தேசத்தை உருவாகுக்வோம்” என கூறியுள்ளார்.