முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மனுவில் உள்ள விபரங்களை நீண்ட நேரம் ஆய்வு செய்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளில் 60 பேரை அரசாங்கம் அண்மையில் நீக்கியமை குறிப்பிடத்தக்கது.