நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரை மீறியும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் செல்ல முயன்றபோது அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.
அந்தப் பகுதியில் போராட்டம் நடத்தக் கூடாது என அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.