மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 08 வீதத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் நேற்றைய (25.03) கூட்டத்திலேயே இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் பேரினப் பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கை சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பண வீக்க இலக்கை 05 சதவீதமாகக் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply