மன்னார் மக்கள் தமக்கு சேவையாற்றக் கூடியவர்களை அடையாளம் கண்டு சரியானவர்களை தெரிவு செய்வார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை தேர்தல் அலுவலகத்தில் நேற்றைய தினம்(25.03) செலுத்திய பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களைக் கருத்திற் கொண்டு,தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு,சரியானவர்களைத் தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.
இம்முறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிடவுள்ளோம். எதிர்வரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்
அத்துடன் யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்