களுத்துரை – பதுரலிய நோக்கி இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நேற்று நள்ளிரவு (26.03) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் காயமடைந்த மற்றொருவர் கலவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் புளத்சிங்கள பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் என்றும், அவர்கள் புளத்சிங்கள மற்றும் ரம்புக்கனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதிக வளைவு கொண்ட பகுதியில் பவுசர் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.